திருச்சி தொழிலதிபர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்
திருச்சி, அக். 23 திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், கல்வி மற்றும் சமூக நலப்பணி செயல்பாட்டாளருமான எஸ்.கே.டி. பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்திலுள்ள அவரது இல்லத்தல் சந்தித்து, மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது மலைக்கோட்டை பகுதி அதிமுக செயலாளர் அன்பழகன், வழக்குரைஞர் முருகானந்தம், வினோத்குமார், சித்ராபாண்டியன் உள்பட பலர் உள்ளனர்.