திருச்சி மாவட்டம் சிறுகனூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை உடைப்பு…
ரெட்டிமாங்குடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடி கடைவீதியில் அமைக்கப்பட்ட அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவ சிலையை உடைத்து சேதப்படுத்தி அதில் சாணியை பூசிச் சென்ற சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரெட்டிமாங்குடி கடைவீதி பகுதியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை சமூகவிரோதிகள் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலை மீது சாணியை பூசி விட்டு சென்றனர். இச்சம்பவத்தை அறிந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் திருஉருவ சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ரெட்டி மாங்குடி கடைவீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் , புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட
50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் சிறுகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.