விஜயதசமியை முன்னிட்டு உத்தமர் கோவிலில் வித்யாரம்பம்
உத்தமர்கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம் நடைபெற்றது.நெல்மனிகளை கொட்டி குழந்தைகளை எழுத பயிற்று வித்த பெற்றோர்கள்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர்கோயிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம் நடைபெற்றது.சரஸ்வதி சன்னதியில் நெல் மனிகளை கொட்டி குழந்தைகளை எழுத பயிற்று வித்த பெற்றோர்கள்.
மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் குடிகொண்டிருக்கும் அருள்மிகு உத்தமர் கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம் நடைபெற்றது
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சரஸ்வதி சன்னதியில் நெல்மனிகளை கொட்டி குழந்தைகளை எழுத பயிற்று வித்த பெற்றோர்கள் …
விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. நவராத்திரி விழாவின் 10 ம் நாள் விஜயதசமி முன்னிட்டு கோவில்களிலும் பள்ளிகளிலும் வித்யா ரம்பம் நடைபெறும். உத்தமர் கோயிலில் நெல்மணிகளை பரப்பி அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வி ஆரம்பித்தனர். குழந்தைகளின் கைபிடித்து பரப்பி வைத்திருக்கும் நெல்லில் அ என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது. அவ்வாறு குழந்தைகள் கற்கும் போது முதலில் அரசி அல்லது நெல்லில் எழுதச் செல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம்.
இந்நிலையில் விஜயதசமியில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது – இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது.
கல்வியை,
அறிவாற்றலை அருளும் தெய்வாமாக விளங்கும் சரஸ்வதிக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே சன்னதிகள் உள்ளது – அந்த வகையில் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள மும்மூர்த்திகள் ஸ்தலமான உத்தமர் திருக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி ஆலயத்தில் ஒவ்வொரு விஜயதசமியின் போது தங்களது குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் கல்வி துவக்க நிகழ்ச்சியை நடத்தி பின்னர் பெற்றோர்கள் பள்ளியில் சேர்ப்பார்கள்.
அந்த வகையில் இன்று காலை முதலே உத்தமர் கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னதியின் முன்பாக நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வருகை தந்து – நெல்மணிகளில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ” அ” என்கிற எழுத்தை எழுத வைத்து வித்யாரம்பம் பயிற்று வித்தனர்.
நடைபெற்றது.நெல்மனிகளை கொட்டி குழந்தைகளை எழுத பயிற்று வித்த பெற்றோர்கள்.