அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவம் : பொதுமக்கள் அதிர்ச்சி
திருச்சி, அக். 24 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இவர் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி ஆர்த்தி (45) என்பவர் நேற்றுஇரவு தனது கீழ் வீட்டினை பூட்டிவிட்டு, தனது குழந்தைகளுடன் மாடியில் தூங்கி உள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7500 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோன்று அதே பகுதியில் வசிப்பவர் பரமேஸ்வரி இரவு தனது வீட்டினை பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் உள்ள காட்டு கொட்டகையில் தங்கி உள்ளார். பின்னர் மறுநாள் காலை பக்கத்து வீட்டினர் பரமேஸ்வரியின் வீடு திறந்து கிடப்பதாக பரமேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த சுமார் 100 கிராம் எடையுள்ள பிரேஸ்லெட் உள்ளிட்ட வெள்ளிப்பொருளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இச்சம்பவங்கள் தொடர்பாக பரமேஸ்வரி, ஆர்த்தி ஆகிய இருவரும் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறையூர் அருகே ஒரே தெருவில் அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.