மன உளைச்சலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி, அக். 25 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் மது குடித்த வாலிபரை பெற்றோர்கள் கண்டித்ததால் மன உளைச்சலில் விஷம் குடித்து விட்டு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கீழத்தெருவை சேர்ந்தவர் மதன்ராஜ்(27) . இவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் செல்லாமல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். தினமும் இப்படி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் உனக்கு எப்படி நாங்கள் திருமணம் செய்து வைப்பது என கண்டித்துள்ளனர். இதனால் மதன்ராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23 ம் தேதி விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.