கோவில்கள் புனரமைப்பு பணி: இந்து அறநிலையத்துறை இணைய ஆணையர் ஆய்வு

0 257
Stalin trichy visit

திருச்சி, அக். 27  திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதிகளிலுள்ள இந்து அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பி.மேட்டூர் ஶ்ரீமாரியம்மன் கோயில் புனரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 5.80 லட்சம், மற்றும் ரெட்டியாபட்டி ஶ்ரீவரதராஜபெருமாள் கோயில் புனரமைப்பிற்காக 7.40 லட்சம் ,சோபனபுரம் ஶ்ரீவேணுகோபால சுவாமி கோயில் புனரமைப்பு பணிகளுக்காக 8.10 லட்சம் மற்றும் ஶ்ரீகாசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு பணிகளுக்காக 16 லட்சம் நிதி ஒதுக்கீடு மற்றும் பணிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வினை
திருச்சி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் பொழுது இந்து அறநிலையத்துறை திருச்சி நிர்வாக பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் கொளதம் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.