லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

0 377
Stalin trichy visit

கொணலையில் சவுக்கு மரம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து, அதிர்ஷ்டமாக உயிர் சேதம் தவிர்ப்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொனலையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சவுக்கு மரம் ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து சவுக்கு மரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் சமயபுரம் அருகே கொனலையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த லாரியை கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி உயிர்த் தப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.