மாநில கல்வி சாதனை ஆய்வு 2023 க்கான பயிற்சி வகுப்பு…

0 489
Stalin trichy visit

குமுளூர் அரசு கல்லூரி மாணவர்கள் பள்ளி நோக்கி பயணம், மாநில கல்வி சாதனை ஆய்வு 2023 க்கான பயிற்சி வகுப்பை முதல்வர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டமும், குமுளூர் DIET ம் இணைந்து “கல்லூரி மாணவர்கள் பள்ளி நோக்கி பயணம் ” – மாநில கல்வி சாதனை ஆய்வு 2023 க்கான பயிற்சி வகுப்பை கல்லூரி முதல்வர் மாரியம்மாள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

இதில் DIET சுந்தரராஜன்,  பூங்குழலி, சுதா அரசு கல்லூரியின் பேராசிரியர்கள்  ஜெயபிரகாஷ், மணிவண்ணன்,  V. சுகன்யா(YRC) மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், அலுவலகப் பணியாளர்களின் ஒத்துழைப்போடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 140 மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் M.சக்திவேல்மாறன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.