சிறுகாம்பூரில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை…

0 358
Stalin trichy visit

சிறுகாம்பூரில் அடையாளம் தெரியாத முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் பகுதியில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அப்பகுதியில் உள்ள மரத்தில் தனது வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுகாம்பூர் பகுதியில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது வேட்டியால் அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வாத்தலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் தற்கொலை செய்து கொண்ட முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.