பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்…

0 272
Stalin trichy visit

துறையூரில் அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள்
பறிமுதல் !

தனிப்படை போலீசார் அதிரடி !

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதி பகுதியில் வசிப்பவர் ராஜா இவர் அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரகசியமாக பட்டாசுகள் பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு அப்பகுதியை சுற்றி வளைத்து குடோனை ஆய்வு செய்தனர். அப்பொழுது ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பதிக்கி வைக்கப்பட்டிருந்ததும் முறையான உரிமம் இல்லாமல் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் அனைத்து பட்டாசுகளையும் பாதுகாப்புடன் பறிமுதல் செய்து துறையூர் காவல் நிலையத்தில் உள்ள அறையில் வைத்து வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவான ராஜாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர் மக்கள் வசிக்கும் பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.