அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து பணம் – நகை கொள்ளை

0 336
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சி பள்ளி விடை கிராமம் சாய் சிட்டியில் உள்ள அம்மையப்பன் நகரில் அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ரூ.94,500பணம்,21.5 கிராம் நகை,250 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

பள்ளிவிடை கிராமம் சாய்சிட்டியில் உள்ள அம்மையப்பன் நகரைச் சேர்ந்தவர் 63 வயதான பரமேஸ்வரி. இவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ரூ.44, 500 பணம், 2 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதானமீனாட்சிசுந்தரம் வீட்டில் 5.5 கிராம் தங்கம், ரூ.50,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் 57 வயதான சாய்குமார் வீட்டில் 250 கிராம் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்தனர். இந்த வீட்டின் உரிமையாளர் கொடைக்கானலில் உள்ளார். அதேபோல் மகேஸ்வரி வீட்டின் பூட்டை உடைத்தனர். இந்த வீடு விற்பனைக்கு உள்ளது.அதில் பொருட்கள் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள், மோப்பநாய் நிலா வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு கிடைத்த் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் நிலா வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இச்சம்பம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.