அங்கக வேளாண்மை கண்டுணர்வு சுற்றுலா…

0 489
Stalin trichy visit

வெளி மாநில அளவில் அங்கக வேளாண்மை கண்டுணர்வு சுற்றுலாவில் லால்குடி பகுதி விவசாயிகள் மாண்டியாவில் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கொப்பாவளி, புதூர் உத்தமனூர், நகர் , அலங்குடிமகாஜனம், மேல வாளாடி, நெருஞ்சலகுடி,மருதூர் ,எசனைகோரை மற்றும் சிறுமயங்குடி, ஆர்.வளவனூர் கிராமத்தில் இருந்து விவசாயிகள் வெளி மாநில அளவில் மாண்டியாவில் நடைப்பெற்ற அங்கக வேளாண்மை கண்டுணர்வு சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.

அட்மா திட்டம் சார்பில் வெளி மாநில அளவில் அங்கக வேளாண்மை விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா லால்குடி வட்டாரத்தில் இருந்து அங்கக வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்ள கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் உள்ள வேளாண்மை அறிவியல் பல்கலைகழகம்,வேளாண்மை அறிவியல் நிலையம்,மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 5 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா சென்று அங்கக சாகுபடி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை , பூச்சி கட்டுப்பாடு,இயற்கை இடு பொருட்களை பயன்படுத்துதல் , களை மேலாண்மை,நீர் மேலாண்மை , வெல்லம் தயாரித்தல்,பற்றி நிலைய பேராசிரியர்கள் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆராய்ச்சி நிலைய குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்கள்.5 நாட்கள் நடைபெற்ற கண்டுணர்வு சுற்றுலாவில் கொப்பாவளி, புதூர் உத்தமனூர், நகர் , அலங்குடிமகாஜனம், மேல வாளாடி, நெருஞ்சலகுடி,மருதூர் ,எசனைகோரை மற்றும் சிறுமயங்குடி, ஆர்.வளவனூர் கிராமத்தில் இருந்து பல முன்னாடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் , உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.