சங்கரய்யா திருவுருவப்படத்திற்கு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை

0 444
Stalin trichy visit

 

திருச்சி, நவ. 16 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் மறைந்த தகைசால் தமிழர், மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் இடதுசாரி தலைவருமான என். சங்கரய்யா இயற்கை எய்தினார்.அவரது இரங்கல் கூட்டத்தில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் இடதுசாரி தலைவரும்,தகைசால் தமிழருமான 102 வயதான என் சங்கரய்யா வயது மூப்பின் காரணமாகவும் உடல் நலம் பாதிப்பின் காரணமாகவும் சென்னையில் நேற்று காலமானார். அவரது பூத உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புள்ளம்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் ரஜினி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட லால்குடி எம்எல்ஏ சவுந்தர பாண்டியன் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து , மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.