ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதி
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் பிழை திருத்த மையம் அமைந்துள்ளது இந்த மையத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் தங்களது ஆதார் அட்டையில் உள்ள பிழை திருத்தம் மற்றும் தொலைபேசி எண் இணைப்பதற்காக இங்கு வந்துமாற்றி சென்று வருகின்றனர். வழக்கம்போல் இன்று ஆதார் மையத்திற்கு ஆலத்துடையான்பட்டி. மருவத்தூர். செல்லிபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து கூலித்தொழிலாளிகள் மற்றும் படிக்காத பாமர சுமார் 8 மணி முதலே 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் ஆதார் அட்டையில் பிழை திருத்தம் செய்வதற்காக வட்டாச்சியார் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்க்கு வந்த பொழுது 10 மணிக்கு மேலாகியும் ஆதார் மையம் திறக்காததால் செய்வது அறியாது பொதுமக்கள் ஆதர் மையத்தின் வாசலில் காத்திருக்கின்றனர்.தங்கள் துறையூருக்கு வந்தால் ஒரு நாள் வீனாக போகுவதாகவும் தாங்கள் தின கூலி வேலை செய்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்