திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீசப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

0 298
Stalin trichy visit

திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மூட்டை மூட்டையாய் இறைச்சி மற்றும் எண்ணெய் கழிவுகளை கொட்டிச் செல்லும் சமூக விரோதிகள்.நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் –
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையுன் இருபுறங்களிலும் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மூட்டை மூட்டையாய் இறைச்சி கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர். அதன் காரணமாக அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நிலையில் இன்று சிலர் அந்தப் பகுதியில் கெட்டுப்போன எண்ணெய்களை அதன் பாட்டில்களுடன் அங்கு வீசி சென்று உள்ளனர். ஏராளமான பாட்டில்கள் அங்கு குவிந்து கிடந்துள்ளது இதனால் சாலையில் சென்ற வாகன பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. மக்கள் பயன்படுத்தும் சாலையில் இறைச்சிக் கழிவுகளும் எண்ணை கழிவுகளும் கொட்டி கிடப்பதால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசி வருகிறது. அது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.