திமுக இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி….

0 390
Stalin trichy visit

திமுக இளைஞர் அணி சார்பில் இருசக்க வாகன பேரணியில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீர பத்திரன்  தலைமையில் கண்ணனூரில் சிறப்பான வரவேற்பு!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கின்ற திமுக மாநில உரிமை மீட்பு இளைஞர் அணி மாநாடு விழிப்புணர்வு இருசக்கர பேரணியை திருச்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஆர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இருசக்கர வாகன பேரணியானது முசிறியிலிருந்து துறையூர் சட்டமன்றத் தொகுதி எல்லையான கண்ணனூர் பகுதிக்கு வந்தடைந்தது . பேரணியில் கலந்து கொண்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு திமுக
மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கபட்டது.

துறையூர் பேருந்து நிலையம். பெரிய கடை வீதி. சின்னக் கடை வீதி வரை சென்று மீண்டும் திருச்சி ரோடு வழியாக லால்குடியை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், மாவட்ட பிரதிநிதி குமார், ஒன்றிய கவுன்சிலர் பேபி லெனின். சுப்ரமணியன். அண்ணா தொழிற்சங்க தலைவர் சுப்பையா,தலைவர் மகேஸ்வரி ரவி, விவசாய மாவட்ட அணி அமைபாளர் செங்கை செல்லமுத்து , சுற்றுப்புற சூழ்நிலை மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, கஸ்டமஸ் மகாலிங்கம் மற்றும் பேருர் கழக நிர்வாகிகள் நடராஜன், வெள்ளையன். மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.