முரசொலி மாறன் நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ்மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, நவ. 23முன்னாள் ஒன்றிய அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் 20’வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் மாவட்டக் கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகே இருதயராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மாவட்டக் கழக நிர்வாகிகள் வன்னை அரங்கநாதன் கோவிந்தராஜ், லீலாவேலு மூக்கன்
துனைமேயர் திவ்யா பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் பகுதி ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்