முரசொலி மாறன் நினைவு நாள் : அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

0 300
Stalin trichy visit

முரசொலி மாறனின் 20-ம் ஆண்டு நினைவு நாள்-அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி, நவ. 23 திருச்சியில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், பகுதி செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள்,
மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்கள்..

Leave A Reply

Your email address will not be published.