திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வளாகத்தில் அன்னதானக்கூடம் திறப்பு
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் 89.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் 89.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இன்று திறந்து வைத்து அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி கடந்த 17-06-2022 ந்தேதியன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகளை விரைவுபடுத்தவும்,பக்தர்களுக்கான வசதியினை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும் 2023 24 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மாநில கோரிக்கை அறிவிப்பின்படி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தினசரி அன்னதானம் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வார நாட்களில் 100 நபர்களுக்கும் வியாழன் தோறும் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 2023 -24 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி விழாயன் தோறும் 500 நபர்களுக்கும் வார நாட்களில் 100 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்
இந்நிலையில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் 89.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இன்று திறந்து வைத்து அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்கள்.
இதனைத் தொடர்ந்து 31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு,இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தனர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ், திருச்சி உதவி ஆணையர் லெட்சுமணன், திருவானைக்காவல் உதவி ஆணையர் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், திருப்பட்டூர் கோவில் செயல் அலுவலர் ஜெய்கிஷன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.