விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப் பள்ளி பயிற்சி
பிச்சாண்டார்கோயிலில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் கிராமத்தில் தமிழ் நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.
இதில் வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா வரவேற்பு உரை ஆற்றினார்.
மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி தலைமை ஏற்று நடப்பு நிதி ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
குமுளூர் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் சிவரஞ்சனி
மண்ணின் தன்மை, மண் வளம் குறித்தும், மண் வளம் பாதுகாப்பு குறித்தும் உரை ஆற்றினார்.
துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி நன்றி உரை ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர்கள் பாஸ்கர், ஆனந்த், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.