வனசரகம் சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

0 472
Stalin trichy visit

திருச்சி, நவ. 24  திருச்சி மாவட்டம் மணப்பாறை வடுகப்பட்டி சமுதாய கூடத்தில் மணப்பாறை வனசரகம், துவரங்குறிச்சி வனசரகம் சார்பாக மணப்பாறை வனச்சரக அலுவலர் மேரிலென்சி, துவரங்குறிச்சி வனச்சரக அலுவலர் தினேஷ்குமார் மற்றும் மணப்பாறை சமூககாடுகள் வனச்சரக அலுவலர் தங்கராஜ் அவரின் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதி  விவசாயிகள் கலந்து கொண்டு காட்டு விலங்குகளால் ஏற்படும் விவசாய பாதிப்பு குறித்தும் இதில் இருந்து விவசாயத்தை பாதுகாத்து தரவேண்டும் என்றும் விவசாயிகள் சார்பில் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக குரங்கு, காட்டு எருமைகளால் ஏற்படும்  விவசாய பாதிப்பை விவசாயிகள் கூறினர். வனத்துறையினர் அதற்கான தகுந்த உரிய நடவடிக்கையை எடுக்கப்படும் என கூறினர்கள் மேலும் காட்டெருமைகள் வருவதை தடுக்க அகழி, வேலிகள் ஏற்படுத்தி காட்டெருமைகள் வருவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.