சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

0 310
Stalin trichy visit

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் CITU மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நவம்பர் 7 அன்று வெளியிட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுத்திட வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், ஆர்டிஓ காவல் துறை மாமூலை கட்டுப்படுத்த வேண்டும், 2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும், இணையவழி சேவையை உடனடியாக துவங்க வேண்டும், மேக்சி கேப் மற்றும் SUV வாகனங்களுக்கு பழைய காலாண்டு வரி விதிப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவாசன், ஆட்டோ சங்க செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.