கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 513
Stalin trichy visit

திருச்சி, நவ. 24 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 10 மேனாள் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 188 மணி நேர விரிவுரையாளர்களின் மாதாந்திர ஊதியத்தினை கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ளது போல் 01.01.2020 முதல் ரூ.25,000 ஆக உயர்த்தி நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வம், தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையினையும் கேட்டு கொண்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி புதுக்கோட்டை சாலையிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் முன்பு ஏயுடியின் மாநிலத் தலவர் பாலமுருகன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மண்டல ஏயுடி தலைவர் சரவணன் முன்னிலையில் இணை செயலாளர் இராஜேந்திரன், தஞ்சை மண்டல தலைவர் கபீர் உரையாற்றினர். மேனாள் மாநிலத் தலைவர் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கிளை பொறுப்பாளர்கள் சரவணன் (லால்குடி), புகழ் கருணாநிதி (ஸ்ரீரங்கம்) மற்றும் மனோகரன்(நாகப்பட்டினம்) ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். நிறைவாக மண்டல ருளாளர் சாதிக் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 பெண் ஆசிரியர்கள் உள்பட 400 ஆசிரியர்கள் கலந்து கொணட்னர்.

Leave A Reply

Your email address will not be published.