அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு….

0 440
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நெடுங்கூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் மீது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நெடுங்கூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுகனூர் போலீசார் விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் இந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், எந்த வாகனம் மோதி விட்டு தப்பி சென்றது என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.