கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
CM-MK-stalin-inspected
திருச்சி தஞ்சை மாவட்டங்களில் ஆறு ஏரி குளங்களில் நடைபெறும் கல்லணை சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேட்டூர் அணை தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.இதனால் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் நாளை (12.06.2021) மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.அவ்வாறு திறக்கப்படும் நீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில்
ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதனை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் கல்லணையில் மணல் குன்றுகள் தூர்வாரும் பணிகள், கொள்ளிடம் காவிரி வெண்ணாறு அணை ஷட்டர்கள் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.பின்னர் ஆய்வு மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு தூர்வாரும் பணிகள் புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார். வருகிறார். அப்போது அதிகாரிகள் அது குறித்த விவரங்களை முதல்வருக்கு விளக்கி கூறினர்.
தஞ்சை மாவட்டத்தில் ரூபாய் 20.05 கோடி அளவில் 184 பணிகள் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 5.90 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுகிறது.
முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், KN நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழிஆகியோரும் மற்றும் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலர் சந்திப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். முதல்வர் வருகையை முன்னிட்டு i G பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கல்லணை ஆய்வைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் வல்லம் சென்று முதலை முத்து வாரி கொடிங்கால் வாய்க்காலில் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். அதனையடுத்து பள்ளி அக்ரஹாரம் சென்று வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் மற்றும் புலிவலம் மணற்போக்கி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் திருச்சி சுற்றுலா மாளிகையில் சென்று ஓய்வெடுக்கும் முதல்வர் மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் செல்கிறார்.