கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, நவ. 30 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் பிரேமாவசுமதி முன்னிலை வகித்தார் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் காமராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு கலந்து கொண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012
குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் 1986 குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 ஆகிய குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் நடைமுறை செயல்பாடுகள் மற்றும் குடும்ப மாற்றுமுறையான குழந்தை தத்தெடுத்தல், பிற்காப்பு வளர்ப்பு திட்டம் தற்காப்பு வளர்ப்புத் திட்டம், நிதி ஆதாரவுத் திட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181 சைபர் கிரைம் தொலைபேசி எண் 1930 மற்றும் இணையவழி குற்றங்களினால் ஏற்படும் பிரச்சனைகள் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
மாணவி துர்காதேவி வரவேற்றார்.மாணவி காவியா நன்றி கூறினார் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எம்பிஏ துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.