தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0 119
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 28 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பருவ கால பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பருவ கால பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில் திருச்சி மண்டலத்தில் 2014 முதல் 2023 வரை பணி நியமனம் பெற்றுள்ள பருவ கால கொள்முதல் பணியாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் . நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போலவே பருவ கால பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை 48 மணி நேரத்திற்குள் கழக விதிப்படி இயக்கம் செய்திட வழிவகை செய்ய வேண்டும் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் அவுட்சோர்சிங் மூலமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி அமர்த்த வேண்டும் கொள்முதல் நிலையம் தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை கொள்முதல் தொடர்பான அனைத்து செலவினங்களையும் நிர்வாகமே ஏற்க வேண்டும் உள்ளூர் அரசியல் மற்றும் விவசாய சங்கங்களின் தலையீடு இல்லாமல் இயக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் பணியாளர்களின் வசிப்பிடத்திற்கு ஏற்றவாறு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் இடையே பணி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.