திருச்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜூலை 28 திருச்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் பேரணி திருச்சியில் நடைபெற்றது.
இப்பேரணியை திருச்சி மாநகர மேயர் அன்பழகன் துவங்கி வைத்தார்.
இதில் பிளாஸ்டிக் தவிர்ப்போம் சுற்று சூழலை காப்போம் சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்க வேண்டாம் அது உடல் நலத்திற்கு கேடு நமது தூய்மை நமது மாநகரத்தின் தூய்மை மற்றும் குப்பைகளை சாலைகளில் ஆங்காங்கே தூக்கி வீச வேண்டாம் அது சுற்றுச்சூழலுக்கு கெடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முழங்கி பேரணியாக சென்றனர் . இப்பேரணி மாநகராட்சியில் இருந்து துவங்கி தலைமை தபால் நிலையம் பாலக்கரை சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் தில்லை நகர் வழியாக மீண்டும் மாநகராட்சி அலுவலகம் வந்தடைந்தனர் . இப் பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்