புதிய பாலத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ்அடிக்கல் நாட்டினார்
திருச்சி மாநகராட்சி 40 மற்றும் 39வார்டுகளை இணைக்கும் வகையில் திருவெறும்பூர் அருகே கவுறு வாய்காலில் திருச்சி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ131லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பாலத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட40வது வார்டுக்கு உட்பட்ட நியூ டவுன் முத்துநகர் 39 வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் கவுறு வாய்க்கால் குறுக்கே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூபாய்131 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பாலம் அமைய உள்ள பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த விழாவில் அரசு அலுவலர்கள், பகுதி செயலாளர்கள் சிவகுமார், நீலமேகம் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.