தென்னிந்திய பல்கலைகழக அளவிலான யோகாசன போட்டி.

0 406
Stalin trichy visit

திருச்சி, டிச. 2  திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான யோகாசன போட்டிகள் தொடங்கியது.

யோகாசன போட்டிகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வேல்ராஜ் துவக்கி வைத்து பேசினார். கல்லூரியின் சேர்மன் பெரியசாமி ,
பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பயிற்சி தலைவர் சுவாமிநாதன்,
உள்ளிட்ட பலர் முன்னிலையில் போட்டிகள் துவங்கியது.
தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான யோகாசன போட்டியில் 115 பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உட்பட 14 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்.
கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் யோகாசன போட்டிகளை உடற்பயிற்சி இயக்குனர்கள் நடத்துகின்றனர்.
இந்த யோகாசன போட்டி குறித்து போட்டியில் பங்கு பெறும் மாணவ மாணவிகள் தெரிவிக்கும் போது பல்கலைக்கழக அளவில் நடைபெறும் யோகாசன போட்டியில் பங்கேற்பது மிகவும் சவாலாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களும் தங்களது தனி திறமைகளை அபாரமாக வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் தமிழக போட்டியாளர்களும் சிறப்பான இடத்தை பிடித்து அரசுக்கு பெருமை சேர்ப்போம் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விளையாட்டு பிரிவு செயலாளர் பாலகுமாரன் செய்துள்ளார். முன்னதாக கல்லூரி முதல்வர் அசோகன் அனைவரையும் வரவேற்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குனர் பாலகணேஷ் துவக்க விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.