மனித உரிமைகள் தினம் உறுதி மொழி ஏற்பு
திருச்சி, டிச. 8 மனித உரிமைகள் தினம் வரும் டிச.10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்று திருச்சி மாநகராட்சி மய்ய அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை துணை மேயர் ஜி.திவ்யா, உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.