கொரட்டூர் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

0 273
Stalin trichy visit

கொரட்டூர் சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீர் பாதிப்புகளைப் பார்வையிட்டு அதற்கான காரணங்கள் குறித்தும்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். கொரட்டூர் ஏரி பகுதியில் இணையும் கால்வாயையும், கொரட்டூர் ஏரியையும் பார்வையிட்டார். கொரட்டூர் ZERO பாயிண்ட் பகுதியைப் பார்வையிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனே அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.
வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு எட்டுவதற்கான கருத்துகளை பொதுமக்களிடமும், அரசு அலுவலர்களிடமும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கொரட்டூர் பகுதி வார்டு-84, 68’வது தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியுள்ளதைப் பார்வையிட்டு, விரைந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.