தொட்டியத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

0 273
Stalin trichy visit

 

திருச்சி, டிச.8  திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நீட் தேர்வை தமிழகத்தில் விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அச்சிடப்பட்ட அட்டையில் திமுக இளைஞரணி சார்பாக கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து திருச்சி ரோடு, வானப்பட்டரை மைதானம், பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள், மாணவ மாணவிகள் ஆகியோரிடம் நீட் தேர்வு வேண்டாம் என வலியுருத்தும் விதமாக கையெழுத்து பெற்றார். அப்போது திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்
அகதீஸ்வரன், தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, திமுக நிர்வாகிகள்
சிவ.நடராஜன், ராஜசேகர் மற்றும் ஒன்றிய கழக, நகரக் கழக, மகளிர் அணி, இளைஞரணி, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.