சேர்ந்து வாழ மறுக்கும் கணவர் மீது நடவடிக்கை கோரி மனைவி போராட்டம்

0 284
Stalin trichy visit

திருச்சி, டிச. 8  திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் லெஷ்மி பிரியா வயது 27. இவருக்கும் மணப்பாறையை அடுத்த சின்னகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வயதில் மகள் உள்ளார். கணவன் – மனைவிக்கு இடையே அவ்வபோது ஏற்படும் பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு பின்னர் இருவரும் சமரசம் அடைந்துசந்தோசமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில் மீண்டும் லெஷ்மி பிரியா கருத்தரிக்கவே அவரிடம் 20 லட்சம் வரதட்சனை கேட்டு மணிவேல் மற்றும் அவரது அம்மா ஆகியோர் மிரட்டி தாக்கியதோடு கருக்கலைப்பு செய்தால் மட்டுமே மீண்டும் வாழ முடியும் என்று மிரட்டி கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகின்றது. கருக்கலைப்பு செய்த பின் லெஷ்மி பிரியாவை விட்டு விட்டு மணிவேல் அவரது வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த லெஷ்மி பிரியா இன்று சின்னகுளத்துப்பட்டிக்கு சென்று கணவன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கணவரை என்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.