குடிபோதையில் மாநகராட்சி உதவி ஆணையரிடம் தகராறு: குடிமகன்களை அடித்து வாகனத்தில் ஏற்றிய போலீசார்

0 16
Stalin trichy visit

குடிபோதையில் மாநகராட்சி உதவி ஆணையரிடம் தகராறு: குடிமகன்களை அடித்து வாகனத்தில் ஏற்றிய போலீசார்

திருச்சி கல்லுக்குழி பகுதி சாலையில் இனோவா காரும் மற்றும் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக உதவி ஆணையர் வாகனம் ஒன்று ஒன்றோடு ஒன்று உரசி சாலை நடுவே நின்றது இதில் இனோவா காரில் வந்த குடிமகன்கள் சிலர் உதவி ஆணையர் வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம் தகராறு ஈடுபட்டனர் மேலும் அவரை அடித்து காயப்படுத்தினர் இதை தடுக்க வந்த பொதுமக்கள் போலீசாரை தகாத வார்த்தைகள் திட்டிய குடிமகன்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை உதவி ஆணையர் கென்னடி மற்றும் போலீசார் குடிமகன்கள் இருவரையும் வாகனத்தில் ஏறுமாறு கூறினர் அப்போது மது போதையில் இருந்த குடிமகன்கள் காவல்துறையினர் வாக்குவாதில் ஈடுபட்டனர் இதனால் போலீசார் ரகலில் ஈடுபட்ட குடிமகன்களை அடித்து வாகனத்தில் ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது

Leave A Reply

Your email address will not be published.