11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

0 356
Stalin trichy visit

சென்னை, டிச. 14  11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக சமய் சிங் மீனா, சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக பாஸ்கரன், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயாள், டி.என்.பி.எல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக அமரேஷ் புஜாரி, சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் இணை கமிஷனராக தர்மராஜன், மதுரை தெற்கு போலீஸ் துணை கமிஷனராக பாலாஜி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக், டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐ.ஜி.,யாக பிரமோத் குமார், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக தமிழ்சந்திரன், கோவை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சி.ஐ.டி பிரிவு எஸ்.பி.,யாக சந்திரசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.