கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

0 255
Stalin trichy visit

திருச்சி, டிச. 14  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆலம்பாக்கம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன்  மோகன்ராஜ் (38) . இவர் ஆலம்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக கடந்த 10 வருடமாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனமுடைந்த மோகன்ராஜ் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.