ரொக்ககுத்தகை கிராமத்தில் விவசாயிகளுக்கு “மெட்டாரைசியம் அனிசோப்லியே” பயன்பாடு குறித்த செயல்விளக்கம்

0 140
Stalin trichy visit

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், ரொக்ககுத்தகை கிராமத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த RAWE மாணவிகள், விவசாயிகளுக்கு Metarhizium anisopliae பயன்பாடு குறித்து செயல்விளக்கம் (Demonstration) அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், Metarhizium anisopliae ஒரு முக்கியமான உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டுக் காரணியாகும் என்றும், இது வெள்ளை வேர்ப்புழு, கரையான் மற்றும் சில மண்ணில் வாழும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்றும் விளக்கப்பட்டது.
மேலும், இதனைப் பயன்படுத்தும் முறைகள் குறித்துச் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, இதனை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து, பரிந்துரைக்கப்பட்ட அளவின்படி வயலில் சீராக இட வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்போது பயன்படுத்துவது சிறந்தது. பயிரின் வேர் மண்டலத்தில் இடுவதன் மூலம் மண்ணில் வாழும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனைப் பயன்படுத்தும்போது தயாரிப்பு லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு மற்றும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.இதன் முக்கியத்துவம், நன்மைகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இதன் பங்கு குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பயிர் பாதுகாப்பு முறையைப் பின்பற்றுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு செயல்விளக்கத்தைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.