தூத்துக்குடிக்கு திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 300 பேர் அனுப்பி வைப்பு

0 305
Stalin trichy visit

தூத்துக்குடி மழை வெள்ள மீட்பு பணிக்காக திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 300 பேர் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மழை வெள்ள நிவாரண பணிக்காக 260 தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்,
சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என 300 க்கு மேற்பட்டோர் பேருந்து மூலம் புறப்பட்டு சென்றனர். மேலும் தூய்மை பணிக்காக கனரக வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.