மணப்பாறையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 340
Stalin trichy visit

மணப்பாறை பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி, டிச. 19  திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2 கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை, அங்கன்வாடி மையம், கழிப்பறை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றியும், கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார். பொய்கைப்பட்டியில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தபோது அங்கிருந்த குழந்தைகள் அமைச்சருக்கு ரோஜா பூ கொடுத்துபோது அதனை ஆர்வமுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர்‌ பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ், துணைத்தலைவர் முத்துலெட்சுமி, மணப்பாறை ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி, திமுக மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர் மு.ம.செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கிருஷ்ணகோபால், பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா, துவரங்குறிச்சி நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பழனியாண்டி, செல்வராஜ், சின்னடைக்கன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.