அய்யப்ப பக்தர்களுக்கு உதவிய மனித நேய மக்கள் கட்சியினர்

0 307
Stalin trichy visit

மழை வெள்ளத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் உதவிய மனித நேய மக்கள் கட்சியினர்.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள
‌ஊனையூர் மற்றும் கண்ணுக்குழி
ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 23 ஐயப்ப பக்தர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சபரிமலை செல்லும் வழியில் திருச்செந்தூர் சென்று ஸ்ரீவைகுண்டம் வழியாக சபரிமலை செல்லும் போது அதிகனமழையின் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
உடனடியாக அவர்கள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமதுவை தொடர்பு கொண்டு நிலமையை தெரிவித்தனர். இதனையடுத்து நெல்லை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் கே‌.எஸ். ரசூல் மைதீன் என்பவரை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து கொடுக்குமாறு கூறினார்.

இதனடிப்படையில் மேலப்பாளையத்தில் உளள தனது அலுவவலகத்திற்கு ஐய்யப்ப பக்தர்களை வரவேற்று அவர் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததுடன் அவர்களுக்கு மதியம் சைவ உணவு வழங்கி வழியனுப்பி வைத்தனர். ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமதுக்கு ஐய்யப்ப பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.