ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி சார்பில் கிறிஸ்துமஸ் விழா
திருச்சி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி சார்பில் கிறிஸ்துமஸ் விழா – சிறப்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
உலகின் மீட்பர் இயேசு’வின் பிறந்த தினமே கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டுவகிறது. இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவுகூரும் வகையில் சுமார் ஒரு மாத காலம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிற விழாவாகவும், அதே நேரத்தில் உலகின் பெரும்பாலான மக்களால் நினைவுகூரப்படுகிற ஒரு பண்டிகையாகவும் கிறிஸ்துமஸ் திகழ்கிறது. மேலும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு பரிசுகள், வாழ்த்துகள், பாடல்கள், குடில் மரத்தை அலங்கரித்தல்… என உலகமே உற்சாகமாக கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி வயலூர் ரோடு ராமலிங்க நகர் பகுதியில் உள்ள திருச்சி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி சார்பில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு திருச்சி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி இயக்குனர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இன்ஜினியர் அந்தோணி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார் அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விழாவில் கிறிஸ்து பிறப்பு பற்றி பாஸ்டர் கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றினார். மேலும் சிறப்பு குழந்தைகளின் நடனம், பாட்டு, நாடகம் மற்றும் கிறிஸ்து பிறப்பு வரலாறு குறித்த நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.