அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

0 328
Stalin trichy visit

திருச்சி, ஜன.3 திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அருகே கீழவாளாடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 68 வயதான முடியப்பர். இவரது மகள் ஊட்டத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது மகளை பார்ப்பதற்காக ஊட்டத்தூருக்கு சென்றுள்ளார். அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது.இதில் படுகாயம் அடைந்த முடியப்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காணக்கிளியநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.