புதிய வகுப்பறைகள் கட்டடத்திற்கான பூமிபூஜை : எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தாளக்குடியில் ரூ.,42 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகள் கட்டிடத்திற்க்கான பூமிபூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருச்சி, ஜன.4 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.,42 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்க்கான பூமிபூஜையை எம்எல்ஏ சௌந்திரபாண்டியன் தொடங்கி வைத்தார்.லால்குடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட தாளக்குடி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 42 லட்சம் மதிப்பில் 2 பதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்க்கான பூமிபூஜையையில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர்,சந்துரு, வார்டு உறுப்பினர்கள் ,கிளை செயலாளர் தலைமை ஆசிரியர், பொதுப்பணித்துறை பொறியாளர், ஆசிரியர்கள் திமுக மநிர்வாகிகள் கலந்து கொண்டனர்