ஸ்ரீ மகா பைரவ பைரவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

0 215
Stalin trichy visit

கூத்தைபாரில் உள்ள ஸ்ரீ மகா காளீஸ்வரி கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ மகா பைரவ பைரவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருச்சி, ஜன.5  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் ஸ்ரீ மகா காளீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு வேத மந்திரங்கள் முழங்க தானியங்கள், மூலிகைகள், மிளகாய், மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் உள்ள பைரவரும் பைரவியும் சேர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீமகா பைரவபைரவிக்கு மஞ்சள், திரவிய பொடி பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ மகா பைரவ பைரவிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, வடைமாலை அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.