பூட்டியிருந்த வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் திருட்டு

0 293
Stalin trichy visit

துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் பூட்டி இருந்த வீட்டில் 15 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சம் ரொக்கம் திருடு போன சம்பவம் குறித்து துறையூர் போலீசார் விசாரணை.

திருச்சி, ஜன.5  திருச்சி மாவட்டம் , துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (65) சம்பவம் நடந்த நேற்று துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் உறவினர் இல்ல துக்க நிகழ்வுக்காக நடராஜன் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இன்று மதியம் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது இது குறித்து நடராஜன் துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடராஜன் வீட்டில் திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.