மத்திய அரசை கண்டித்து விவசாயிகளை திரட்டி போராட்டம் : அய்யாக்கண்ணு பேட்டி

0 253
Stalin trichy visit

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் மத்திய அரசை கண்டித்து விரைவில் பத்தாயிரம் விவசாயிகளை திரட்டி திருச்சியில் போராட்டம்-
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி

திருச்சி, ஜன. 5 திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார். முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தாசில்தார்கள் முசிறி பாத்திமா சகாயராஜ், தொட்டியம் கண்ணாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு, விவசாயிகள் சங்க தலைவர் அயிலை சிவசூரியன் மற்றும் விவசாயிகள் பலரும் கோரிக்கைகள் குறித்து பேசினர். முன்னதாக அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றுடன் அய்யாறு இணைக்க வேண்டும். மழைவெள்ள காலங்களில் தண்ணீர் அய்யாற்றில் விட்டு ஏரிகளுக்கு செல்லவேண்டும்.
காவிரி ஆற்றில் பல இடங்களில் குடிநீருக்காக ஆழ்துளை போர்வெல் மூலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப் படுவதால் காவிரி தடுப்பணைகள்
கட்ட வேண்டும். முப்போகம் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது காவிரியில் தண்ணீர் வராததால் சாகுபடி செய்யாமல் உள்ளனர். அந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் தமிழக அரசு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
சாலை விரிவாக்க பணிகளுக்கு வடகரை வாய்க்கால் பாதியாக குறைந்து விட்டது.
தென்கரை வாய்க்காலில் தண்ணீர் விடப்படுகிறது. ஆனால் வடகரை வாய்க்காலில் அவ்வப்போது மட்டுமே தண்ணீர் விடபடுகிறது. தென்கரை வாய்க்காலில் விடுவது போல் வடகரை வாய்க்காலிலும் தண்ணீர் விட வேண்டும். வடகரை வாய்க்காலுக்கான தலைப்பை மாயனூர் கதவனை பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும்.35 லட்சம் ஏக்கர் அளவில் தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு லட்சம் ஏக்கர் அளவில் கூட சாகுபடி செய்ய இயலவில்லை.விவசாயிகளை அழிவிலிருந்து மத்திய மாநில அரசுகள் காக்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மத்திய அரசை கண்டித்து முசிறியிலும் திருச்சியிலும் பத்தாயிரம் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.