இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா
திருச்சி, இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா
ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது. தமிழ் மாதத்திலே மிக சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது தை மாதம். தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் விழாவை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா இந்திரா காந்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி வளாகத்திலுள்ள விநாயகர் கோவில் முன்பு வண்ண கோலமிட்டு மாணவிகள் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வந்தபோது, பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதில் பாரம்பரிய முறைபடி மாணவிகள் சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். கிராமிய மணம் மாறாத தமிழர் திருநாளை கொண்டாடும் வகையில் மாணவ மாணவிகள் குடில்கள் அமைத்து இருந்தனர். முன்னதாக மாணவிகள் அம்மன் வேடமணிந்து முளைப்பாரி, பூரண கும்பத்துடன்பொங்கல் பானைகளை எடுத்து வந்தனர். மாணவிகள் பாரம்பரிய முறைப்படி கரும்புகள் வைத்து மஞ்சள் கொற்று சுற்றப்பட்ட பானைகளில் பொங்கல் வைத்துதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை விமர்சையாக கொண்டாடினர். இதையடுத்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.