மணப்பாறை அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா
மணப்பாறையில் பொங்கலை கொண்டாடிய அரசு கல்லூரி மாணவ- மாணவிகள்
கும்மியடித்து உற்சாக கொண்டாட்டம்
திருச்சி, ஜன.13 தமிழர்களின் உணர்வோடு கலந்த உன்ன திருநாள் தான் இந்த பொங்கல் திருநாள். இன்னும் இரண்டு நாட்களுக்கு பின் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் இன்று பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவஇ மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலைஇ வேஷ்டிஇ சட்டையில் கலந்து கொண்டனர். மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு பொங்கல் பானையில் அரிசியை போட பொங்கி வழிந்த பொங்கலை கண்டு மாணவஇ மாணவிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் மாணவஇ மாணவிகள் அனைவரும் வட்டமிட்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்து உற்சாசமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.