பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு : சி.பி.ஐ. கட்சி விளம்பர பதாகை

0 242
Stalin trichy visit

மணப்பாறையில் எந்தவித அறிவிப்பும் இன்றி பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு
வரவு – செலவை விரிவாக பதிவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்
விளம்பர பதாகை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இதில் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு 7 ஆயிரம் லிட்டர் மணப்பாறை நகரப் பகுதிகளில் சில்லரையில் விற்கப்படுகின்றது. கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு 33 ரூபாயில் இருந்து 36.50ரூபாயராக உயர்த்தி வழக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லரையில் 45 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பால் தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ள நிலையில் பால் விலை உயர்வு குறித்தும், இதுவரை உள்ள வரவு செலவு விபரங்கள் குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் 45 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்கும் போதே போதிய லாபம் இருக்கும் சூழ்நிலையில் 50 க்கும் விற்பதால் மக்கள் மிகுந்த சிமரத்திற்கு ஆளாகி உள்ளதாகவும், பால்விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பதாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.